Naatupura Kathai kalanjiyam / நாட்டுப்புறக்கதைக்களஞ்சியம்



  • ₹1,150

  • SKU: SA0010
  • ISBN: 9789355483966
  • Author: K.Rajanarayanan
  • Language: Tamil
  • Pages: 1040
  • Availability: In Stock

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்: சொல்கதை மரபு என்பது உலகின் மிகத் தொன்மையான கதை மரபாகும். இத்தகைய கதைவெளிகள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிலவி வருகின்றன.தமிழ் மொழியில் செவிவழிக்கதைகளாக உலவிய நாட்டுப்புறக் கதைகளை எல்லாம் தொகுத்து, அவற்றை வகைப்படுத்தி, மிகுந்த தேடலுடன் களப்பணிகள் செய்து தொகுக்கப்பட்ட நாட்டார் கதைகளைக் களஞ்சியமாக இந்நூலின் மூலம் தந்துள்ளோம்.

 

கி. ராஜநாராயணன்: தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர். நாட்டார் கதைகளை சேகரித்து, அவற்றை எழுத்தில் பதிவு செய்யும் பணியைத் தன் வாழ்நாளில் சுமார் 50 ஆண்டு காலமாகத் தொடர்ந்து செய்தவர். 'கதைசொல்லி' என்ற காலாண்டு இதழையும் நடத்தியவர். 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக 1991ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

 

சண்முகசுந்தரம்: தமிழ்த்துறைப் பேராசிரியர்; 'தன்னானே' நாட்டுப்புறவியல் இதழின் ஆசிரியர். பல்வகைச் சிறுகதைகள்,நாவல்கள் படைத்துள்ள இவர், நாட்டுப்புறவியல் ஆய்வாளரும் ஆவார்.

 

கழனியூரன்: நாட்டுப்புறவியல் துறையில் இள முனைவர் பட்டம் பெற்ற இவர், 'செவக்காட்டு மக்கள் கதைகள்' முதலான பல நாட்டுப்புறவியல் நூல்களை இயற்றியவர்.

 

பாரததேவி: நாட்டுப்புறக்கதைச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட பெண்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். 'நிலாக்கள் தூரம் தூரமாய்' முதலான பல நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படைத்தவர்.

 

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up